இராமநாதபுரத்தில் அமைந்துள்ளது ஸ்பார்க்லிங் டோப்பாஸ் அகாடமி நடத்திய பள்ளி மாணவர்களுக்கான உலக சாதனை நிகழ்வானது கடந்த அக்டோபர் 13-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களை நினைவு கூறும் வகையில் அவரது திரு உருவம் வரைதல்,அவரது உருவ படத்திற்கு வண்ணம் தீட்டுதல், மற்றும் ரூபிக்ஸ் கியூப் மூலம் அவரது உருவப்படத்தை உருவாக்குதல் என பல நிகழ்வுகளில் மாணவர்கள் கலந்துக் கொண்டு 15 நிமிடத்தில் அப்துல்கலாமின் உருவபடம் மற்றும் வண்ணம் தீட்டுதல் முடித்து கலாம் புக் ஆப் ரெகார்டில் இடம் பெற்றுள்ளனர்.