ரெகுநாதபுரத்தில் அ.தி.மு.க புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம்-ஒன்றிய செயலாளர் கருப்பையா ஏற்பாடு!!!

கீழக்கரை,அக்.13:-

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க,இராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எம்.ஏ.முனியசாமி வழிகாட்டுதலின் பேரில் இராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் கருப்பையா ஏற்பாட்டில் புதிய உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் செயல்வீரர்கள்,வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் ரெகுநாதபுரம் பாலகமலா திருமண மஹாலில் நடைபெற்றது.

முதல் படம்:ரெகுநாதபுரத்தில் நடந்த அ.தி.மு.க புதிய உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கல், செயல்வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசுகிறார்.இரண்டாம் படம்:திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ப.கருப்பையா பேசுகிறார்.மூன்றாம் படம்:கூட்டத்தில் கலந்து கொண்ட செயல்வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள்.
முதல் படம்:ரெகுநாதபுரத்தில் நடந்த அ.தி.மு.க புதிய உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி,செயல்வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டத்தில் திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ப.கருப்பையா பேசுகிறார்.இரண்டாம் படம்: கூட்டத்தில் ஆலோசனை வழங்க வருகை தந்த அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமிக்கு திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ப.கருப்பையா பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.ஒன்றிய அம்மா பேரவை இணைச்செயலாளர் கவுன்சிலர் நாகநாதன் அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன்,மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன்,மாவட்ட பொருளாளர் குமாரவேலு,மாவட்ட ஓட்டுநர்‌ அணி செயலாளர் பழனி முருகன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கி,அ.தி.மு.க வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினர்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசுவதையும்,கூட்டத்தில் கலந்து கொண்டவர்களையும் படத்தில் காணலாம்.

முடிவில் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச்செயலாளர் வித்தியக்குமார் நன்றி கூறினார்.அம்மா பேரவை ஒன்றிய துணைச்செயலாளர் செவத்தான் (எ) வெள்ளையன்,மேதலோடை ஊராட்சி மன்றத்தலைவர் தினகர் ராஜா,மீனவரணி ஒன்றிய செயலாளர் நாகசாமி,மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் நாகராஜன்,வண்ணாங்குண்டு சீனி வலசை கிளைச் செயலாளர் துரைராஜ்,வண்ணாங்குண்டு கிளைச் செயலாளர் கந்தன்,ரெகுநாதபுரம் ஜாஹிர் உசேன் உட்பட திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *