ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வாஹித் கிரிக்கெட் அகாடமி மற்றும் நண்பர்கள் உதவி கரங்கள் அறக்கட்டளை இணைந்து தமிழக மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டு நாள் கிரிக்கெட் பயிற்சி முகாமினை செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரியில் நேற்றும்,இன்றும் நடத்தினர்.
அடுத்த மாதம் நடைபெற உள்ள தென்னிந்திய அளவிலான மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டிக்கு தமிழக மாற்றுத்திறனாளிகள் அணிக்கு வீரர்கள் தேர்வு செய்வதற்காக நடைபெற்ற பயிற்சி முகாமில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 45க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கு பெற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.இந்த பயிற்சி முகாம் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போர்டு துணைத்தலைவரும்,தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்க தலைவர் ரமேஷ் கண்ணன் மேற்பார்வையில் நடைபெற்ற நிலையில்,தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் வாஹீத் கான் மற்றும் இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணித்தலைவர் சச்சின் சிவா ஆகியோர் பயிற்சியில் சிறப்பாக தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி விளையாடிய 20 வீரர்களை தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்தனர்.