மும்பை:மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் 5,500 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, ஆக.,2ம் தேதி, ஐ.பி.ஓ., எனும் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது.
பங்கு வெளியீட்டின் போது ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால், தன்னிடம் உள்ள 3.79 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளார். இந்திய பங்கு சந்தையில் பட்டியலிடப்படும் முதல் மின்சார வாகன புத்தொழில் நிறுவனம் ‘ஓலா எலக்ட்ரிக்’ என்பது குறிப்பிடத்தக்கது.