மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் தமிழக முதல்வர், சுகாதார துறை அமைச்சர், சுகாதார துறை செயலர், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர், துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் மற்றும் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி முதல்வர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு மருத்துவமனை தற்போது தாலுகா மருத்துவமனையாக செயல்படுகிறது.
கீழக்கரை மற்றும் சுட்டுவட்டரா மக்கள் இந்த மருத்துவமனைக்கு தினம்தோறும் 250 முதல் 300 நபர்கள் வரை வெளிநோயாளியாக சிகிச்சை பெற வருகின்றார்கள்.இந்த மருத்துவமனையில் சுமார் 7 மருத்துவர்கள் பணிபுரிய வேண்டும்.ஆனால் தற்போது 2 மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றார்கள்.
இந்த மருத்துவமனை தாலுகா மருத்துவமனையாக இருப்பதாலும், கீழக்கரை மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு பிரதான மருத்துவமனையாக இருப்பதாலும் கூடுதல் செவிலியர்கள் பணி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.இந்த மருத்துவமனையில் பிஸியோதொரபிஸ்ட் பணியில் இல்லை.இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை காரணமாக விபத்து மற்றும் அவசர சிகிச்சை பெற வரும் உள்,வெளி நோயாளிகளை வலுக்கட்டாயமாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடும் நிலை தொடர்கின்றதுஇதனால் அவசர பிரிவு நோயாளிகள் பாதிப்படையும் நிலை உருவாகின்றது.
எனவே சமூகம் இந்த பகுதி பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பணியமர்த்த எங்கள் மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் கேட்டு கொள்கின்றோம்.இவ்வாறு தனது மனுவில் கூறியுள்ளார்.