புதுடில்லி:மின்சார கார்களைப் பயன்படுத்தும் 51 சதவீதம் பேர், இன்ஜின் கார்களுக்கு திரும்ப நினைப்பதாக, பார்க்கிங் சேவைகளை வழங்கும் ‘பார்க் பிளஸ்’ நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது.
இந்த கணக்கெடுப்பு, புதுடில்லி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய மூன்று நகரங்களில் வசிக்கும் 500 மின்சார கார் உரிமையாளர்களிடம் எடுக்கப்பட்டுள்ளது.
சார்ஜிங் கட்டமைப்பு, குறைந்த வேக சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் பிரச்னைகளும் இருப்பதால், இந்திய சூழ்நிலைகளுக்கு ஹைபிரிட் கார்கள் சிறந்ததாக இருக்கும் என, ஆட்டோமொபைல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.