“ஆடிப்பட்டம் தேடி விதை என்பது பழமொழி ஆடி மாதத்தில் ஓரிரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும் புரட்டாசியில் இருந்து தொடர்ச்சியாக கிடைக்கும் மழையின் உதவியால் பயிர் வளர்ந்து விடும் மண்ணில் விழும் விதைகள் முழுமையாக முளைக்கத் தேவையான அருமையான தட்ப வெப்ப சூழ்நிலை நிலவும் மாதம் ஆடி மாதம் ஆகும். மானாவாரி பயிர்களுக்கு ஆடிப்பட்டம் மிகவும் சிறந்த பட்டமாகும்.
சோளம்,கம்பு,கேழ்வரகு, திணை, சாமை, வரகு, பனிவரகு, குதிரைவாலி ஆகியவை சிறுதானிய பயிர்கள் ஆகும் சோளம், கம்பு, குதிரைவாலி, உள்ளிட்ட தானியங்கள் விதைக்கலாம் .இந்த பயிர்கள் பயிர் சுழற்சி முறைக்கு உகந்தாகவும் வறட்சி, களர், உவர் மற்றும் வளமற்ற நிலப்பகுதியிகளில் சாகுபடி செய்ய ஏற்றதாகவும் உள்ளது.
சிறுதானியங்களில் மிகுதியான தாதுப்பொருட்கள் உயிர்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் குறைந்த அளவு கொழுப்புச்சத்துக்கள் அடங்கி இருக்கிறது மற்ற தானியங்களை காட்டிலும், சிறுதானியங்களில் கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் அதிக அளவில் உள்ளது சிறுதானியங்களை பயிரிடும் பெரும்பாலான விவசாயிகள் இயற்கை மற்றும் நுண்ணுயிர் உரங்களையே பயன்படுத்துகின்றனர். சிறுதானியப் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மிகக் குறைவாக உள்ளது இதனால் இவ்வகைப் பயிர்களுக்கு எந்தவிதமான பூச்சிகொல்லிகளை பயன்படுத்த தேவையில்லை சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுவதில்லை குறைந்த அளவு தண்ணீர் உள்ள பகு தி மற்றும் மானாவாரி பயிர்களாக சிறுதானியங்களைபயிரிடலாம். மேலும் இதனை தீவனப்பயிர்களாகவும் பயிரிடலாம்.சிறுதானிய பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க தரமான விதைகளை பயன்படுத்துவது அவசியம்.
தரமான விதை:-
சிறுதானிய பயிரின் விளைச்சலுக்கு தரமான விதையே மூலதனம் + தரமான விதை என்பது பாரம்பரிய குணங்களில் சிறிதும் குறையாம் பிற ரகம் மற்றும் பிற பயிர்கள் கலப்பு இல்லாமல் தூசி தும்பு இல்லாமல் பூச்சி பூஞ்சானம் தாக்காமல் அதிக முளைப்பு திறன்இருக்கும் விதையே தரமான விதை ஆகும் விதைகளாக இருக்க வேண்டும் தரமான விதைகள் என்றால் விதைச்சான்றளிப்பு பெற்ற அவ்வகை விதைகள் 75 சதவீத விதை முளைப்புத்திறன் இருக்க வேண்டும். சரியான பயிர் எண்ணிக்கை, சீரான பயிர் வளர்ச்சி, ஒரே நேரத்தில் பூத்து முதிரும் பயிர் ஒரே நேரத்தில் அறுவடை அதிக மகசூல் தருபவை.
சிறுதானிய விதைகளை விதைப்பு செய்த 35 நாட்களுக்கு அல்லது பூப்பதற்கு 15 நாட்கள் முன்னதாகவே ராமநாதபுரம் விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குநர் அலுவலகத்தில் தங்கள் பகுதி வட்டார வேளாண் உதவி விதை அலுவலர்கள் மூலமாக விதைப்பு அறிக்கை (Sowing Report ) 3 நகல்களில் உரிய படிவத்தில் பதிவு செய்யப்படவேண்டும். விதைப்பு அறிக்கை படிவத்தின் பின்புறம் வயலின் வரைபடம் இருக்க வேண்டும். இத்துடன் விதைகளுக்கான சான்றட்டைகள் விதை வாங்கிய விற்பனை ரசீது இணைக்கப்பட வேண்டும். ஒரு விதைப்பு அறிக்கையில் அதிகபட்சமாக 25 ஏக்கர் வரை பதிவு செய்யலாம். விதைப்பண்ணையின் இருவேறு பகுதிகள் 50 மீட்டருக்கு மேல் இருந்தாலோ விதைப்பு நாள் 7 நாட்களுக்கு மேல் வித்தியாசப்பட்டாலோ, தனித்தனி விதைப்பு அறிக்கைகளில் பதிவு செய்ய வேண்டும் 1 ஏக்கர் சிறுதானிய விதைப்பண்ணைக்கு பதிவுக்கட்டணமாக செலுத்த வேண்டும் 205/8 விதை உற்பத்திக்கு ஏற்ற சாகுபடி தொழில்நுட்பங்களை திறம்பட பயன்படுத்த வேண்டும். ரகத்தின் மரபுத்தூய்மையை பராமரிக்க போதுமான பயிர் விலகல் தூரத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு ரகத்தின் மரபுத்தூய்மையை உறுதிப்படுத் த அவ்வப்போது கலவன் அகற்ற வேண்டும். நிலம் தேர்வு, விதைக்கும் பருவம், பயிரின் வளர்ச்சி.பூக்கும் பருவம் மற்றும் அறுவடைக்கு முந்தைய நிலைகளில் பயிர்களை கண்காணித்தல் சிறுதானிய பயிர்களின் விதைகள் சிறிய அளவில் இருப்பதால் கல்,மண் மற்றும் தூசிகளை கவனமாக அகற் சுத்தம் செய்த விதைகளை விதை நேர்த்தி செய்து முறையாக சேமித்து வைக்க வேண்டும்.இவ்வாறு சிறுதானிய பயிரில் செய்து வேளாண் துறைக்கு விதைப்பண்ணை அமைத்து தரமான விதைகளை உற்பத்தி வழங்கினால் கூடுதல் இலாபம் பெறலாம் என ராமநாதபுரம் விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு உதவி இயக்குநர் சிவகாமி தெரிவித்துள்ளார்.